உலகம்

13 வயது சிறுமிக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம் – 10 வயது முதல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிறுமி வாக்குமூலம்!

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குறித்த சிறுமியின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக உதவிய பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாவலப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மேலும் 6 பேர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்டுத்தப்பட்டமை தொடர்பில், கடந்த 7ஆம் திகதி தகவல் வெளியானது.

அவர், இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் காணாமல்போயிருந்த நிலையில், உறவினர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினரால் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதில் தனது தந்தை 10 வயதில் இருந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர், தன்னை ஹரங்கல பகுதியில் உள்ள ஒரு குகைக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் தடுத்து வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தின் அப்படையில், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் 32 வயது இளைஞரும் சிறுமியின் தந்தையும் முக்கிய சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அந்தச் சிறுமியின் தந்தை மற்றும் ஆண் நண்பர், உறவினர் உட்பட மேலும் 3 பேரை கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில், 50 இற்கும் அதிகமான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Hot Topics

Related Articles