உலகம்

”சைனோபாம் ” தடுப்பூசியை ஏற்றிக்கொள்பவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதில் சிக்கல்!

சைனோபாம் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும்போது அங்கு அவர்களுக்கு தடுப்பூசி வகைகள் தொடர்பான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

சில மத்திய கிழக்கு நாடுகள், தமது எல்லைக்குள் பயணிப்போர் சைனோபாம் அல்லாமல் வேறு தடுப்பூசி வகைகளை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.

இலங்கை மக்களுக்கு அதிகளவில் சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதில் நாட்டு மக்கள் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சிக்கல் தீர்க்கப்பட்டும் வரை தொழில்வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது.

குறித்த மத்தியகிழக்கு நாடுகளுடன், இது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ள 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகளின் ஒரு பகுதியினை வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்காக செல்லும் பணியாளர்களுக்கு செலுத்துவதற்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கனடா உள்ளிட்ட பல நாடுகள் தமது நாட்டுக்கு வருபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தடுப்பூசி குறித்து வரையறைகளை அமுல் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles