உலகம்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நேற்று (14)  கொவிட் தொற்றால் 50 பேர் மரணித்துள்ளதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,661 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும்,  பெண்கள் 21 பேரும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 – 50 வயதுகளுக்கு இடைப்பட்ட 8 ஆண்களினதும், 4 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவ்வாறே, 60 வயதுக்கு  மேற்பட்ட 21 ஆண்கள் மற்றும் 17 பெண்களும் உயிரிழந்தவர்களிடையே அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாட்டில் இன்று மேலும் 1,447 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 280, 506 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 939 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.

அதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 253,953 ஆக அதிகரித்துள்ளது.

Hot Topics

Related Articles