உலகம்

விஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த தனது சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு தல்லுபடி செய்யப்பட்டதுடன் அவருக்கு அபராதம் விதிக்கப்படமை ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு ஆதரவாக ஒரு தரப்பும் விஜய்க்கு எதிராக ஒரு தரப்பும் ஹேஷ்டாக் உருவாக்கி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் வரி கட்டினாரா, இல்லையா என்ற விவாதம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் விஜய்யின் ஸ்மார்ட்லுக் ஃபோட்டோ ஒன்று வெளியாகி, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த ஃபோட்டோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. தலையில் ஒன்றிரண்டு நரைத்த முடிகள், லேசாக நரைத்த தாடியுடன், கண்ணாடி அணிந்த விஜய்யின் ஃபோட்டோ தான் வைரலாகி வருகிறது.

பேக்கிரவுண்டில் பாலைவனம் போன்ற லொகேஷன் உள்ளது. இதனால் இது பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதா, பீஸ்ட் கெட்அப் லுக்கா இது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.


நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும் ரூ.1 லட்சம் அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

இதனை தொடர்ந்து விஜய் வரி செலுத்தவில்லை என செய்தி பரவியது. எனினும் நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்தியுள்ளார். அதற்கு தற்போது விலக்கு கேட்கிறார்.

சச்சின் டெண்டுல்கரின் ஃபெராரி உட்பட கடந்த சில ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பல சூப்பர் கார்களுக்காக இதுபோன்ற முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோதம் என்று கூறும் அளவுக்கு எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இதன் படி, தளபதி விஜய் ஏற்கனவே தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு ஆயுட்கால வரியை செலுத்தியிருந்தார் வரியை குறைக்கவே அவர் கேட்டார் என சமூக வளைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ரசீதும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

 

Hot Topics

Related Articles