உலகம்

பிரேசிலிய கடற்கரையில் சிறுநீர் கழிக்க முயன்ற நபர் சுறா தாக்கி மரணம்!

பிரேசிலிய கடற்கரையில் சிறுநீர் கழிப்பதற்காக கடலுக்குள் சென்ற ஒருவர் பயங்கர சுறா தாக்குதலில் இறந்தார்.

,தன் போது இவர் குடிபோதையில் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
51 வயதான மார்செலோ ரோச்சா சாண்டோஸ் என்பர், சனிக்கிழமையன்று ஜபோடாவோ டோஸ் குவாராபேஸில் உள்ள பீடேட் கடலில் நின்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுறா அவரது கையும், காலின் ஒரு பகுதியையும் கடித்துள்ளது.
அதிர்ச்சியடைந்த பார்வையாளர்களால் சூழப்பட்ட கடற்கரையில் அசைவில்லாமல் கிடந்த அவரை ரெசிஃபில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேசிலிய மாநிலமான பெர்னாம்புகோவில், ஜபோடாவோ டோஸ் குவாராப்ஸ் அமைந்துள்ள இடத்தில், 1992 ஆம் ஆண்டு முதல் 25 இறப்புகளுடன் 62 சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன.

மக்களை தண்ணீருக்குள் நுழைய வேண்டாம் என்று பல்வேறு அறிகுறிகள் இருந்தபோதிலும், சிலர் அதனை பின்பற்றுவதில்லை என தெரிவிக்கப்படுகுின்றது

 

Hot Topics

Related Articles