உலகம்

பராமரிப்பாளரை கடித்த பாம்பு மீது வழக்கு – இந்தியாவில் விநோதம்!

திருவனந்தபுரம், பாளையத்தில் உள்ள பழமையான உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரை கடித்த பாம்பு மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டாக்கடையை சேர்ந்த ஹர்ஷாத் (வயது 45) என்பவர் குறித்த பூங்காவில் பம்பு பண்ணையில் பாம்புகளுக்கு உணவு வைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளில் இவர் ஈடுபட்டு வந்துளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பாம்பு பண்ணையில் தனியாக வைத்திருந்த பாம்புகளின் அறையை சுத்தம் செய்தார். பின்னர், கார்த்திக் என்ற ராஜநாகத்துக்கு உணவு வைத்துள்ளார் அப்போது, அந்த பாம்பு திடீரென ஹர்ஷாத்தை கடித்ததுள்ளது.

இதில் சிகிச்சை பலனின்றி ஹர்ஷாத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உயிரியல் பூங்கா உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹர்ஷாத்தை கடித்த கார்த்திக் பாம்பு மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே கேரள அரசு, இறந்த ஹர்ஷாத்தின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக அறிவித்ததுடன், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது.

Hot Topics

Related Articles