உலகம்

நடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

தமிழில் தற்போது முன்னனி நாயகனாக மட்டுமல்லாமல் வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

மிகவும் இயல்பான நடிப்பால் ரசிகர்களினால் அதிகம் விரும்பப்படுபவர் விஜய் சேதுபதி.

தற்போது கைவசம் அதிகப் படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி, சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

அப்போது பேசிய அவர், “நான் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ரூபாய் 750 சம்பளத்துக்கு வேலை செய்தேன். இரவு 7.30 மணி முதல் 12.30 மணி வரை அங்கு வேலை செய்வேன். அதுமட்டுமல்லாமல் நான்கு மாதங்கள் டெலிபோன் பூத்தில் வேலை செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இது போன்ற சாதாரண வேலைகளில் இருந்து கஷ்டப்பட்டு தங்கள் திறமையால் முன்னுக்கு வந்துள்ளனர். உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கூறலாம்.

அதைப்போல் விஜய் சேதுபதி தற்போது கைவசம் 26 படங்கள் வைத்துள்ளார். தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து தற்போது வரை ஒரே நேரத்தில் கைவசம் அதிக படங்களில் வைத்திருக்கும் முதல் நடிகர் விஜய் சேதுபதிதானாம்.

விஜய் சேதுபதி ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் நல்ல நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களில் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார்.
 அதேபோல் முன்னணி நடிகர்களுக்கு வில்லன் வேடம் என்றால் சம்பளத்தை கொஞ்சம் கூட்டி எப்போது வேண்டுமானாலும் வரத் தயார் என கூறி விடுகிறார்.
விஜய் சேதுபதி ஏற்கனவே விஜய்யுடன் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட தற்போது கமல்ஹாசனுடன் விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

Hot Topics

Related Articles