உலகம்

இலங்கையில் ஒரே நாளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பாதசாரிகள் உட்பட 10 பேர் பலி!

இலங்கையில் நேற்றைய தினத்தில் பல வாகன விபத்துக்களில் மூன்று பாதசாரிகள் உட்பட  10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 07 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயணக்கட்டப்படுகள் தளர்த்தப்பட்டதையடுத்து நாட்டில் வாகன விபத்துக்களில் அதிகரிப்பை காண முடிவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் வீதி ஒழுங்கு விதிகளுக்கு அமைய இது மிகவும் அதிகம் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் 2,144 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு 2,839 பேர் உயரிழந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் இதுவரை 1,266 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Hot Topics

Related Articles