உலகம்

”இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஆரம்பமாகியது” – ஐதராபாத் ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை துவங்கி உள்ளதாக, ஐதராபாத் ஆய்வாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலையின் இயற்பியல் துறை நிபுணரும், முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் விபின் ஸ்ரீவத்சவா, கொரோனா மூன்றாம் அலை தொடர்பாக சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 15 மாதங்களில் புதிய தொற்று பரவல், இறப்பு தொடர்பான தினசரி பதிவுகளை பகுப்பாய்வு செய்துள்ள அவர்,ஆய்வுகளின் படி இந்தியாவில் 4ம் திகதி முதல் கொரோனா மூன்றாம் அலை துவங்கியுள்ளதாக கூறுகிறார்.


கடந்த பெப்பரவரி மாதம் நாட்டில் இரண்டாம் அலை துவங்கியபோது பதிவான தொற்று பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்கள், தற்போதைய நிலையுடன் ஒத்திருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால், மூன்றாம் அலை வேகம் எடுப்பதை தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
– நன்றி தினமலர்

Hot Topics

Related Articles