உலகம்

பயணிகள் முககவசம் அணிய மறுத்ததால் விமானத்தை ரத்து செய்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் !

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து பாகமாஸ் மாகாணத்துக்கு பறப்பதற்கு திட்டமிட்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறப்பதற்கு சில நிமிடங்கள் இருந்த போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இருக்கைகளை முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஒவ்வொருவராக ஏற தொடங்கினார்கள்.

அப்போது 17, 18 வயதுக்கு உட்பட்ட சில இளைஞர்கள் குழுவாக அந்த விமானத்தில் பணயிக்க வந்திருந்தனர்.

எனினுமு் அவர்கள் யாரும் முககவசம் அணியவில்லை. விமான பணிப்பெண்கள் அவர்களை முககவசம் அணியுமாறு கூறியபோதும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

விமான நிறுவனத்தின் விதிமுறைகளின்படி பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அந்த இளைஞர்களிடம் விமான நிறுவன ஊழியர்கள் சக பயணிகள் என அனைவருமே வற்புறுத்தினார்கள்.

ஆனாலும் அவர்கள் முககவசம் அணிய மறுத்துவிட்டதன்காரணமாக மற்ற பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான நிறுவனம் அந்த விமானத்தின் பயணத்தை ரத்து செய்துள்ளது.

அதன்பிறகு மற்ற பயணிகளை ஒரு விமானத்திலும், முக கவசம் அணிய மறுத்த பயணிகளை வேறு விமானத்திலும் அழைத்து செல்ல திட்டமிட்டது.

மற்ற பயணிகள் உடனடியாக வேறொறு விமானத்தில் பயணத்தை மேற்கொள்ள நிறுவனம் ஒழுங்கு செய்தது.

எனினுமு் முககவசம் அணிய மறுத்த இளைஞர்களுக்கு மறுநாள் தான் விமானம் கிடைக்கும் என்று கூறி அவர்களை ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது,

ஆனால் அந்த பயணிகளில் பலருக்கு 17 வயதே ஆவதால் அவர்கள் தங்க ஓட்டல் விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை.

இதன் காரணமாக அவர்கள் வேறு வழி இல்லாமல் விமான நிலையத்திலேயே இரவில் பொழுதை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் மறுநாள் வேறு விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Hot Topics

Related Articles