உலகம்

இலங்கையில் பெண் மருத்துவர் உடைமாற்றும் போது மறைந்திருந்து புகைப்படங்களை எடுத்த வைத்தியர் கைது!

இலங்கை ராகம மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்டமை மற்றும் புகைப்படங்களை எடுத்ததற்காக வைத்தியர் ஒருவர் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரகாமா மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் அளித்த முறைப்பாடுக்கு அமைய கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் 35 வயது மருத்துவ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது அறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து, அவர் உடைமாற்றிகொண்டிருந்த போது படங்களை எடுத்துள்ளதாக குறித்த பெண் மருத்துவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சம்மாந்துறையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியரின் கைத்தொலைப்பேசியையும் பொலிஸார் பரிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த சில மாதங்களாக ராகம மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர் மீது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு முறைப்பாடுகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த நபர் வெளிசரை மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஜூலை 16 வரை தடுப்புகாவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles