உலகம்

இந்த இரு தடுப்பூசிகளை கலந்து போட்டால் ‘டெல்டா’வில் இருந்து 99 பாதுகாப்பு கிடைக்குமாம் : தாய்லாந்து புதிய முயற்சி!

‘சினோவாக், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கலந்து போட்டால் டெல்டா, ஆல்பா ஆகிய உருமாறிய கோவிட் வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்’ என, தாய்லாந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியாக சினோவாக்கின் (SVA.O) முதலாவது டோஸை பெற்றவர்களுக்கு தாய்லாந்து அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி (AZN.L) தடுப்பூசியை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்தும் என்று திங்களன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு சீனாவின் தடுப்பூசியுடன் அஸ்ட்ராஜெனெகா வழங்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொவிட் வைரசின் உருமாறிய டெல்டா, ஆல்பா ஆகிய வகைகள், மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.

அந்த வைரஸ்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக தாய்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது டோஸ் முதல் சினோவாக் டோஸ் செலுத்தப்பட்டதன் பின்னர் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தாய்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் தெரிவித்து உள்ளதாவது:

சினோவாக் தடுப்பூசியில் 2 டோஸ் போட்டுக்கொண்டால், ஆல்பா வைரஸூக்கு எதிராக போதிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

ஆனால், டெல்டா வைரஸூக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. சினோவாக் தடுப்பூசியில் ஒரு டோஸூம், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியில் ஒரு டோஸூம் கலந்து போட்டுக்கொண்டால், அதைவிட அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 90 சதவீதத்துக்கு மேல் செயல்திறன் இருக்கும்.

அதேநேரத்தில், சினோவாக் தடுப்பூசியில் 2 டோசும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியில் ஒரு டோஸூம் போட்டுக்கொண்டால், 99 சதவீத செயல்திறன் இருக்கும். அது, டெல்டா, ஆல்பா ஆகிய இரு உருமாறிய வைரஸ்களுக்கு எதிராகவும் போதிய நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

டெல்டா வைரஸூக்கு எதிராக மாடர்னா தடுப்பூசியும் போதிய பாதுகாப்பு அளிக்கும். ஆனால், தாய்லாந்தில் அதற்கு தட்டுப்பாடு நிலவுவதால், உயிரை பணயம் வைத்து கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த கலவை, மாற்று தீர்வாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
– நான்றி தினமலர்

Hot Topics

Related Articles