உலகம்

JAT Holdings இடம்பெறவிருக்கும் ஆரம்ப பொது பங்கு வழங்கலுக்கான மெய்நிகர் முதலீட்டாளர் அமர்வை நடாத்தியுள்ளது  

இலங்கையின் மர பூச்சுகள் தயாரிப்புக்களின் நம்பகமான முன்னோடியான JAT Holdings, எதிர்வரவிருக்கும் அதனது ஆரம்ப பங்கு பொது வழங்கலுக்கான உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (ஜுலை 08) இடம்பெற்றதுடன், இதையொட்டியதாக அதே நாளில் முதலீட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் மெய்நிகர் அமர்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரம்ப பங்கு பொது வழங்கலின் அங்குரார்ப்பண நிகழ்வு பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஸ_ம், ஃபேஸ்புக் லைவ் மற்றும் யூடியூப் லைவ் வழியாக அவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் இந்த மெய்நிகர் முதலீட்டாளர் அமர்வில் நிதி ஆய்வாளர்கள், நிதி ஆலோசனை முகாமையாளர்கள் மற்றும் ஆரம்ப பங்கு பொது வழங்கல் தொடர்பில் ஆர்வமுள்ள ஏனைய தரப்பினர் போன்ற மதிப்பிற்குரிய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதி செயல்திறன் மற்றும் வளர்ச்சி பாதை குறித்து விரிவான கலந்துரையாடல் இதன் போது இடம்பெற்றது.

கெப்பிட்டல் அலையன்ஸ் லிமிட்டெட் மற்றும் NDB முதலீட்டு வங்கி ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்ற JAT Holdings இன் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை பொதுமக்களுக்கு 82,904,846 சாதாரண பங்குகளை வழங்குவதன் ஊடாக (ordinary voting share) ரூபா 2.2 பில்லியன் தொகையை திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலின் போது பங்கொன்று ரூபா 27.00 என்ற விலைப்பெறுமதியில் விநியோகிக்கப்படவுள்ளதுடன், இதனை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு உடனடியாகவே 21% பெறுமதி அதிகரிப்புடன் பங்கொன்றுக்கான பெறுமதி ரூபா 32.70 ஆக மாறுமெனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

தள்ளுபடி செய்யப்பட்ட பணப்புழக்கம் (discounted cash flow – DCF) மற்றும் முன்னோக்கிய வருவாய் விகிதம் (forward-earnings ratio – PER) மதிப்பீட்டு முறைகளின் இணைப்பு மூலமாக இது கணிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை மூலம் திரட்டப்படும் நிதி, தற்போதுள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வசதியை அனைத்து பூச்சுகளுக்குமுரிய முழுமையான, அதிநவீன வசதிகள் கொண்டதாக மேம்படுத்தல், பங்களாதேஷில் ஒரு உற்பத்தி ஆலையை அமைத்தல், White by JAT சந்தைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைத்தல் ஆகிய நிறுவனத்தின் உடனடி நோக்கங்களுக்கு நிறுவனம் பயன்படுத்தும்.

“நிறுவனம் எதிர்வரவிருக்கும் ஆரம்ப பங்கு பொது வழங்கல் மூலமாக அடுத்த கட்டத்திற்குள் காலடியெடுத்து வைக்கவுள்ளதையிட்டு நாம் வியத்தகு அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் சவாலான காலகட்டங்களுக்கு நாம் முகங்கொடுத்தாலும், முக்கிய தீர்க்கமான தீர்மானங்களையும் தற்போதைய தொழில்துறையின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கும் புத்தாக்கப்படுத்துவதற்கும் பாரிய முன்னேற்றங்களை எடுப்பதில் JAT Holdings ஒருபோதும் பின்னின்றதில்லை,” என்று JAT Holdings நிறுவனத்தின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.

ஈலியன் குணவர்த்தன அவர்கள் கருத்து தெரிவித்தார். “மெய்நிகர் முதலீட்டாளர் அமர்வு எதிர்கால முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும், ஆரம்ப திகதிக்கு முன்னர் ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கையின் விபரங்களை விளக்கமாக விவாதிப்பதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

இதில் ஆர்வமுள்ள தரப்பினர் முன்விபரணம் மற்றும் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை www.ipo.jatholdings.com ஐப் பார்வையிடுவதன் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் செயல்முறையின் தங்குதடையற்ற தகவல் தொடர்பாடலை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த அரட்டை (chat) செயல்பாட்டு வசதியையும் இந்த தளம் கொண்டுள்ளது.

இது தவிர, ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கைக்கென பிரத்தியேகமான ஒரு துரித சேவை அழைப்பு இலக்கம் மற்றும் அழைப்பை மேற்கொண்டு துண்டிப்பதன் மூலமாக தெரியப்படுத்தும் (missed call line) அழைப்பு வசதியையும் JAT Holdings கொண்டுள்ளது. குறிப்பாக ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையின் போது முதலீட்டாளர்கள் மிகவும் முழுமையான தகவல் விபரங்களைப் பெற்று, தங்கள் விரல்நுனிகளில் சிறப்பான தீர்மானங்களை முன்னெடுக்க முடியும்.

 

Hot Topics

Related Articles