உலகம்

ஹஜ்ஜுப் பெருநாள்  தினம் குறித்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜுலை 22 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்  தினம் என, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமய கலாச்சாகர திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற துல்ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை மாநாட்டின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டின் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையின் எப்பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து, நாளை மறுதினம் துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாளாக கொள்ளப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Hot Topics

Related Articles