உலகம்

நள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள்! – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை

பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை தமது தொழிலுடன் சேர்த்து மேலை நாட்டு கலாசாரத்திற்கு மாறிவருகின்றது.

இப்படியானவர்கள் அந்த கலாசாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள்.

மாத இறுதியில் ‘டீம் அவுட்டிங்’ என சுற்றித்திரிந்து, குதூகலிக்கிறார்கள். ‘நள்ளிரவு பிரியாணி’ போன்ற உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்கள்.

இவ்வாறு நேரம் காலம் பார்க்காமல், நள்ளிரவில் பிரியாணி போன்ற கலோரி அதிகமான உணவுகளை உண்பது உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.

நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

சில ஓட்டல்களில், பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள். அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.

பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Hot Topics

Related Articles