உலகம்

இலங்கையில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு – திருமணங்களை நடத்த அனுமதி!

இலங்கையில்  அதிகரித்துவரும் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் இன்று(10) முதல் தளர்த்தப்பட்டுள்ளன

இதற்கமைய புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண வைபவங்களை மண்டபக் கொள்ளளவில் 25 சதவீதமானோருடன் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அதாவது அதிகபட்சமாக 150 பேருடன் திருமண வைபவங்களை நடத்த முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே,  அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு 5 – 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி  புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது….

Hot Topics

Related Articles