உலகம்

முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு!

கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டமை மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் மைருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த மாதம் 28ம் திகதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 7ம் திகதி குழந்தையும் பிறந்தது.

தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று தெரிவித்தார்.சிகா வைரஸ் கர்ப்பமாக இருக்கும் பெண்களை ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் தான் பெரும்பான்மையாக பரவுகிறது.

சிகா வைரஸினால் பாதிக்கப்படும் நிலையில், பிறக்கும் குழந்தை சிறிய அளவிலான மூளை மற்றும் தலையுடன் பிறக்கும் என சொல்லப்படுகிறது. இதை microcephaly என்று அழைக்கிறார்கள்.

2015ல் இந்த வைரஸ் முதல் முறையாக பரவத்தொடங்கியதிலிருந்து, கிட்டதட்ட 15 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் அதிகமாக பிரேசில் நாட்டைத் தான் பாதித்தது. ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இன்னும் உணரப்பட்டு தான் வருகிறது.

Hot Topics

Related Articles