உலகம்

துபாய் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து – 14 ஊழியர்கள் காயம்

துபாய் துறை முகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்து சரக்கு கப்பல் ஒன்றில் தீப்பரவியதில் சேர்ந்த 14 ஊழியர்கள் காயமடைந்துள்ளதுடன் கப்பலிக் அதிகமான கொள்கலன்களில் எரிந்து நாசமாகியுள்ளன.

ஆம்பத்தில் 3 கொள்கலன்களில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 130 கொள்கலன்களுடன் அந்த கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 14 ஊழியர்களும் பணியில் இருந்தனர்.

மிக வேகமாக பரவிய தீபரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு துபாய் போலிஸ் தலைவர் அப்துல்லா கலீபா அல் மர்ரி மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார்.

கப்பலில் தத்தளித்துக்கொண்டு இருந்த 14 ஊழியர்கள் உள்ளிட்ட பலர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த தீவிபத்தின் போது வெடி வெடித்தது போல சத்தம் கேட்டதாகவும் செம்மஞ்சள் நிற தீ சுவாலை ஏற்பட்டது கடலோர பகுதிகளில் வசித்து வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த துபாய் துணை ஆட்சியாளர் மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது, “துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் கன்டெய்னரில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகவும் திறமையாக செயல்பட்டு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் சூழ்நிலையை சிறப்பாக கையாண்ட எனது குழுவினரை பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்
துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் உலக அளவில் கடல்சார் வர்த்தகத்தில் முக்கிய மையமாக இருந்து வருகிறது.

பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் இந்த துறைமுகத்தின் வழியாகவே பெரும்பாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Hot Topics

Related Articles