உலகம்

இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தல் நடைமுறைகள்!

கொவிட் -19 தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (07) வெளியிட்டுள்ளார்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட  தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக்கொண்டு 14 நாட்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு, பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள்  அனுமதிக்கப்படுவர்.

இதனை  என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனுடாக, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.

எனினும், இரண்டு தடுப்பூசிகை ஏற்றி 14 நாட்கள் ஆகாதவர்களும் தொற்று உறுதிசெய்யப்படும் நபர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

நாட்டுக்கு வருவதற்கு முன்னர் (முதல் நாள்) பி.சி.ஆர் அறிக்கையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படாதவர்களுக்கும் இவ்வாறு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை வரும் அனைத்து பயணிகளும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைப் பெற்ற அசல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும்ஆங்கில மொழியில் பி.சி.ஆர் சோதனை அறிக்கையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

எனினும் இலங்கைக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பிரஜைகள் மற்றும் அந்நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்று திரும்பியவர்கள் இந்த நடைமுறைக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles