உலகம்

“டெல்டா” வை விட வேகமாக பரவும் “லாம்ப்டா“ கொரோனா திரிபு 30 நாடுகளில் அடையாளம்!

தற்போது உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபை விட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொவிட்-19 வைரஸ் திரிபு பெரு நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த கொவிட்-19 திரிபுக்கு “லாம்ப்டா“ என பெயரிடப்பட்டுள்ளது.

அதன் “அசாதாரண” திரிபு விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது,
“C .37” என விஞ்ஞான ரீதியாக அறியப்பட்ட “லாம்ப்டா“ மாறுபாடு முதன்முதலில் 2020 டிசம்பரில் பெருவில் கண்டுபிடிக்கப்பட்டது,

தற்போது இந்த புதிய வகை திரிபு பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

“லாம்ப்டா“ மாறுபாட்டுடன் தொடர்புடைய கோவிட் -19 தொற்றாளர்கள் பெருவில் 82 சதவீதம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த மாறுபாடு மிக உயர்ந்த கோவிட் -19 இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், “லாம்ப்டா“ மற்ற வைரஸ்களை போன்று மிகவும் ஆக்கிரோஷமானது என்பதை சுகாதார நிபுணர்கள் ஏற்கவில்லை,
இந்த மாறுபாடு மற்றும் அதன் உயர் தொற்று வீதத்தைப் புரிந்து கொள்ள விரிவாக ஆய்வுகளை சர்வதேச சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Hot Topics

Related Articles