உலகம்

‘பிரண்ட்ஷிப்’ படத்தில் தேவாவுடன் இணைந்து ”அடிச்சு பறக்கவிடும்“ லாஸ்லியா!

ஹர்பஜன் சிங்கின் ’பிரண்ஷிப்’ படத்தில் நடிப்பதோடு பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் நடிகை லாஸ்லியா.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

ஹர்பஜன் சிங்குக்கு ’பிரண்ஷிப்’ படத்தில்  ஜோடியாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இந்திய சினிமா துறையில் பரபலமடைந்துள்ள லாஸ்லியா  நடித்துள்ளார்.

நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.

நேற்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளையொட்டி் இந்த படத்தின் முதல் பாடலாக வெளிவந்துள்ள ‘அடிச்சு பறக்கவிடுமா’ பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் லாஸ்லியா.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில்  ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Hot Topics

Related Articles