உலகம்

மெக்ஸிகோ வளைகுடா கடலில் தீபரவல் – எரிமலையை ஒத்த விசித்திர காட்சி !

மெக்ஸிகோ வளைகுடா கடலில் தீபரவல் ஏற்பட்டுள்ளமை ஒரு விசித்திரமான காட்சியை உருவாக்கியுள்ளது.

கடலுக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் 3 ஆம் திகதி காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காம்பேச் விரிகுடாவில் உள்ள ஒரு கடல் எண்ணெய் வயலான கு-மாலூப்-ஜாப் என்ற மேடையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் நீருக்கடியில் குழாயில் ஏற்பட்ட கசிவுக்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ கடலின் மேல் பரப்பில் பரவலடைந்து காணப்பட்டுள்ளது.தீயின் அதிக வெப்பநிலை காரணமாக, அந்த பிரதேசம் முழுவதும் கடல்நீர் எரிமலை குழம்பு போன்று காட்சியளித்துள்ளது.

அதிகாலை 05 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ பரவல் 5 மணிநேர போராட்டத்திற்கு பின்பு அந்நாட்டு நேரப்படி 3 ஆம் திகதி காலை 10:45 மணிக்கு இந்த தீப்பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குழாயுடன் இணைக்கப்பட்ட வால்வுகள் மூடப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டதாக நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தீப்பரவலினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles