உலகம்

DFCC வங்கி, சமூகங்களை மேம்படுத்துவதற்காக ரூபா ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை திரட்டிய”DFCC Digital Dansala

DFCC வங்கி, சமூகங்களை மேம்படுத்துவதற்காக ரூபா ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை திரட்டிய”DFCC Digital Dansala” க்கு வாடிக்கையாளர்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களைப் போற்றுகின்றது

29 ஜூன் 2021: வங்கிச்சேவை தொழிற்துறையில் ஒரே கலப்பு பணப்பையாக (wallet) விளங்கும் DFCC Virtual Wallet இன் வலுவூட்டலுடன் மேற்கொள்ளப்பட்ட Digital Dansala முயற்சி, அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இதன் மூலம் வாடிக்கையாளர்கள், வங்கி மற்றும் அதன் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் வழங்கியுள்ள நன்கொடைகள் 3 வாரங்கள் குறுகிய காலப்பகுதிக்குள் ரூபா ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை எட்டியுள்ளது.

எதையும் தாங்கி, மீண்டு எழக்கூடிய சமூகங்களை உருவாக்குவதற்கான வங்கியின் பேண்தகமை மூலோபாயத்திற்கு உதவுகின்ற இந்த முயற்சி, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சமூகங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

இந்த கருணை மனப்பாங்குடனான செயற்பாட்டின் மூலம் நாடெங்கிலும் 139 இடங்களில் அமைந்துள்ள வங்கியின் கிளை வலையமைப்பு அடங்கலாக யாழ்ப்பாணம், வெள்ளவாய, பண்டாரவளை, நுவரெலியா, பதுளை, ஹட்டன், மொனராகலை, எம்பிலிப்பிட்டிய, வெலிமடை, பலாங்கொடை, புத்தள, பிபிலை, மஹியங்கனை, கொடகாவல, மாத்தளை, ரடாம்பல, அக்குரஸ்ஸ, அம்பலாந்தோட்டை, புத்தளம், கொழும்பு, நாவலை, நுகேகொடை மற்றும் மாலபே போன்ற பிரதேசங்களில் வசிக்கின்ற பலரும் இந்த உதவிகளைப் பெற்றுள்ளனர்.

DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில், இதனை சாத்தியமாக்கிய எங்கள் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

வாடிக்கையாளர்கள் நன்கொடையளிக்கின்ற தொகைக்கு சமமான தொகையை வங்கியின் சார்பில் நன்கொடையளிப்பதாக நாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சி அமைவதுடன், இந்த கடினமான காலகட்டங்களில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக கணிசமான தொகை நன்கொடையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சவாலான காலகட்டங்களில் ஒருவருக்கொருவர் இணைப்பினை ஏற்படுத்தவும், உதவவும் பாரம்பரியங்களை மீறி டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது முக்கியம் என்று DFCC வங்கி நம்புவதுடன், DFCC Vitual Wallet இன் ‘Digital Dansal’ அதனையே முன்னெடுத்துள்ளது.

எங்கள் சக பிரஜைகளின் உள்ளங்களையும் வாழ்வையும் எட்டி, அவர்களின் வதனங்களில் புன்னகையைத் தோற்றுவிக்க டிஜிட்டல் இடைமுகத்தைப் பயன்படுத்தி, முதன்முறையாக இந்த வகையான செயல்பாட்டை ஆரம்பித்த ஒரே வங்கி DFCC வங்கி என்பதையிட்டு நான் பெருமிதம் கொள்கிறேன், என்று குறிப்பிட்டார்.

 

 

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: கிளை வலையமைப்பில் அடங்கியுள்ள பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு DFCC கிளைகளின் பணியாளர்கள் உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் காட்சி. 

 

 

 

Hot Topics

Related Articles