உலகம்

15 வருட திருமண உறவை முடித்துக்கொள்ள அமீர்கான் தம்பதி முடிவு!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் தமது 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவத்துக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளமை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு ஆசாத் ராவ் கான் என்ற ஒரு மகன் உள்ளார்.

லகான் இந்திப்படம் படம் தொடங்கிய போது அதில் கிரண் ராவ் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

அப்போது அமீர்கான் மற்றும் கிரண் ராவ் சந்தித்தனர். அவர்கள் காதலித்து டிசம்பர் 28, 2005 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

மகன் ஆசாத் ராவ் கானை டிசம்பர் 5, 2011 அன்று வாடகை தாய்மூலம் பெற்றுக் கொண்டனர்.

அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில்,
இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம், எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது.

எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம்.

இனி நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாகவும் ஒரு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம்.

சில காலத்திற்கு முன்பே இதனை நாங்கள் திட்டமிட்டு, இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்கிறோம்.

எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக அவரை வளர்ப்போம், பாதுகாப்போம். என தெரிவித்துள்ளனர்.

அமீர்கான் முன்பு ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்கு பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.

Hot Topics

Related Articles