உலகம்

கனடாவில் சுட்டெரிக்கும் சூரியன் – இதுவரை 719 பேர் பலி!

கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக கடும் வெயில் நிலவி வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதனிடையே முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் 7 நாட்களில் மட்டும் 719 பேர் வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.மேலும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவானது.

இதற்கிடையில் கொளுத்தும் வெயில் காரணமாக லிட்டன் கிராமத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

Hot Topics

Related Articles