உலகம்

பக்தர்கள் இன்றி கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை நடத்த முடிவு!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உற்சவத்திற்காக ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த உற்சவ ஊர்வலத்திற்கு முன்னதாக இணைத்துக்கொள்ளப்படும் நடனக்குழுவினர் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

Hot Topics

Related Articles