உலகம்

டெல்டா வகை கொரோனா 90க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரம் அடையும் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

உலகின் 96 நாடுகளில் கொரோனா வைரஸின் டெல்டா வகை பாதிப்புகள் உள்ளன என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த பாதிப்பு கடந்த வாரத்தை விடவும் கூடுதலாக 11 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த 96 நாடுகளில் வரும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸின் வகைகளான ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

தற்போது வரை, 172 நாடுகளில், ஆல்பா வகை கொரோனா பாதிப்புகளாலும், 120 நாடுகளில் பீட்டா வகை கொரோனா பாதிப்புகளாலும், 72 நாடுகளில் காமா வகை கொரோனா பாதிப்புகளாலும் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுவரை கொரோனாவால் 18.29 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 39.62 லட்சம் பேர் உயிர் இழந்துமுள்ளனர்.

எனினும், 16.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான 1.14 கோடி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Hot Topics

Related Articles