உலகம்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது !

இந்தியாவில் தீவிரமடைந்திருந்த கொரோனா வைரஸின் 2வது அலை பாதிப்பு தற்போது குறையத்தொடங்கியுள்ளது.

எனினும், நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்து 312 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக 853- பேர் உயிரிழந்துள்ளதையடுத்து இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 46,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் படி, இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 04 இலட்சத்து 58 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.

குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 95 இலட்சத்து 48 ஆயிரத்து 302 ஆகவும் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 09 ஆயிரத்து 637 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles