உலகம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு செய்ய கேரள அரசு அனுமதி!

கொரோனாவால் உயிரிழந்தோர் உடலை உறவினர்கள் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்ல கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி அளித்துள்ளார்.

உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உடலை வீட்டில் வைத்திருப்பதற்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

அந்த நேரத்துக்குள் அவரவர் மதத்தின்படி இறுதிச் சடங்கை நடத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைய இன்னும் சில காலம் ஆகலாம் என கூறியுள்ள அவர் மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles