உலகம்

காதலனால் ஏமாற்றப்பட்டசிறுமிக்கு பொலிஸ் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரம்!

காதல் என்ற பேரில் இளைஞன் ஒருவனால் ஏமாற்றப்ட்ட சிறுமி முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையம் சென்ற போது இங்கு கான்ஸ்டபிள் ஒருவரால் துஷ் பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை நெலுவ மேல் கிகும்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் தனது தாயுடன் 29 ஆம் திகதி பொலிஸ் நிலையம் சென்ற போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் அவரை முத்தமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் இளைஞன் ஒருவனை காதலித்து வந்த நிலையில் குறித்த இளைஞனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞன் சிறுமி தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி சிறுமியை பல முறை குறித்த இளைஞன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பெற்றோர் அறிந்து கொண்டதையடுத்து இளைஞனை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக 29 அன்று பொலிஸ் நிலையம் சென்ற போது விசாரணைகளுக்காக தாயையும் மகளையும் இரவு வரையில் பொலிஸ் நிலையத்தில் தங்கி இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே தாம் தங்கியிருந்த அறைக்கு வந்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது மகளை முத்தமிட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவ்வாறு முத்தமிட்ட குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Hot Topics

Related Articles