உலகம்

வெளிநாடுகளில் பபணிபுரிந்த 142 இலங்கையர்கள் கொவிட் தொற்றால் மரணம்!

வெளிநாடுகளில் பபணிபுரிந்த இலங்கையர்களுள் 142 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மத்திய கிழக்கு உட்பட 16 நாடுகளில் பணிபுரியும் இலங்கையா்கள் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்தும், தொற்றுக்குள்ளாகியும் உள்ளதாக
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த காலப்பகுதிக்குள் வெளிநாடு சென்றவர்களுள் 4800 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதுடன், அவர்களில் 4600 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Hot Topics

Related Articles