உலகம்

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி 15 மாத சிறைத் தண்டனை!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸூமாவுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் 15 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஜனாதிபதியாக இருந்த போது, ஊழல் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு வழங்கப்பட்டிருந்த  நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்துக்கே, இவ்வாறு 15 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்  அரசியலமைப்பு நீதிமன்றம், துணை தலைமை நீதிபதி ரேமண்ட் சோண்டோ தலைமையிலான விசாரணை ஆணையத்துடன் ஒத்துழைக்க ஜுமா மறுத்ததாக தீர்ப்பளித்து உள்ளது .
தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபக்கு  சிறைத்தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

ஜெகொப் ஸூமா பொலிஸில் சரணடைய ஐந்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காலப்பகுதியில் அவர் சரணடையத் தவறியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது ஆட்சி காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டில், வர்த்தகர்களுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனினும் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ‘ஆட்சியைக் கைப்பற்றும் சதி’ எனக் குறிப்பிட்டு, முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸூமா விசாரணைகளில் ஆஜராகவும் மறுத்துள்ளார்.

ஜேக்கப் ஜுமா.  2009 முதல் 2018 வரை அவரது பதவிக்காலத்தில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள்  தொடர்பாக நாட்டின் சுப்ரீம் கோர்ட்  விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles