உலகம்

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமனம்

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழக காவல் துறையின், 30வது டி.ஜி.பி.,யாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், 1962 ஜூன் 5ல் பிறந்தார்.

வேதியியல், ஆங்கிலம் மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.

‘சைபர் கிரைம்’ தொடர்பாகவும், முதுகலை பட்டம் பெற்றுள்ளார்

இளைஞர்களின், ‛ரோல் மாடல்’ என அழைக்கப்படும் சைலேந்திரபாபு,   1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.

நன்னடத்தையுடன் சிறையில் இருந்த 700க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க பரிந்துரை செய்தார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை சைலேந்திர பாபு வென்றவர்.

கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள சைலேந்திரபாபு சென்னை அடையாறில் துணை ஆணையராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles