உலகம்

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரிப்பு – ஜூன் மாதத்தில் 1501 மரணங்கள்!

இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 45 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த ஒருவர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 30 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 12 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 32 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 1501 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதற்கான காரணம் என்னவென ஆராய விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று (29) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,890 பேர் அடையாளம் காணப்படதையடுத்து  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 255,508 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 29,052 பேர் நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று (29) மேலும் 2,222 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 223,471 ஆக உயர்வடைந்துள்ளது.

Hot Topics

Related Articles