உலகம்

இலங்கை மாணவர்களின் ஒன்லைன் கல்வி தேவைகளுக்காக Daraz Cares- கல்விக்கு கைகொடுப்போம்

Covid-19 பெருந்தொற்று பரம்பல் காரணமாக இலங்கையின் கல்வி செயற்பாடுகள் ஒன்லைன் கற்றலுக்கு மாற்றமடைந்துள்ளது. பல பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வியினை பெற்றுக்கொள்வதற்கு இது தடையாக அமைந்துள்ளது. பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெரும்பாலான வீடுகளில் குறிப்பாக கிராமபுறங்களில் இக்கற்றல் செயற்பாடுகளுக்கு உதவக்கூடிய ஸ்மார்ட் கருவிகள் அவர்களிடம் இருப்பதில்லை.

அவர்களின் குடும்ப பொருளாதார நிலைமைஇ வருமானக் குறைவு போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அது போன்ற வசதியினை வழங்க முடியாமல் உள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் கற்றலுக்கு குறைந்தளவிலான அணுகலையே கொண்டுள்ளமையால் அவர்களின் அடிப்படை கல்வியினை முழுமையாக மறக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்நிலைமையை கண்டறிந்த னுயசயண இதற்கோர் தீர்வாக ‘Daraz Cares – கல்விக்கு கைகொடுப்போம்” ஊடாக உதவிக்கரம் நீட்டும் ஓர் முயற்சியினை ஆரம்பித்துள்ளது.

 

2021 ஜுன் 24 தொடக்கம் டிஜிட்டல்சார் பொருட்கள் கொள்வனவின் கீழ் சகல வாடிக்கைளர்களுக்கும்  Daraz Cares தளமானது  நன்கொடை  வுவுச்சர்களின் கொள்வனவு வியாபிக்கப்பட்டுள்ளது. இந்நன்கொடை வகைகள் ஆனது ரூ.100 இலிருந்து ஆரம்பிப்பதுடன் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி அட்டையைக் கொண்டு வவுச்சர்களை கொள்வனவு செய்யலாம்.

வாடிக்கையாளர் அதிகபட்ச  நன்கொடை பெறுமதிக்காக பல்வேறு வவுச்சர்களை  தெரிவு செய்ய முடியும். திரட்டப்பட்ட  இந் நன்கொடைகள் மேம்படுத்தல் செயற்திட்டத்தின்  நிறைவில் மாணவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய கல்விசார் கருவிகளையும் வளங்களையும் கொள்வனவு செய்ய பயன்படுவதுடன் குறித்த பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

 

இலங்கை Daraz இன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் திரு.ஹேஷான் பெரேரா கூறுகையில் “Daraz  இன் CSR அடித்தளமாக இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு  எங்கள்  சமூகத்தில் செயல்படும் பல நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. னுயசயண ஊயசநள.

தற்போது தொலைநிலை கல்வியை அணுகுவதற்கான வசதிகள் அத்தியாவசியமானதொன்றாக கருதப்படுகின்றது. இவ் ஒன்லைன் கற்றல் செயற்பாட்டிற்கு  மாறியமை ஆனது பல மாணவர்கள் அவர்களின் அடிப்படை கல்வியினை கற்கும் வாய்ப்பினை இழக்கச் செய்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கான சொந்த இலத்திரனியல் கருவிகள் மற்றும் பிரின்டர் போன்ற ஏனைய துணை உபகரணங்களும் இல்லாமை ஆகும்.

இம் மேம்படுத்தல் செயற்திட்டத்தின் ஊடாக உதவ ஆர்வமுள்ளவர்களை அணித்திரட்டுவதோடு உரிய மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்.” எனக் குறிப்பிட்டார்

நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கிடையில் கல்விக்கான அணுகலில் உள்ள இடைவெளியினை குறைப்பதனை நோக்காக கொண்டுள்ள இம் மேம்படுத்தல் செயற்திட்டத்தின் ஆரம்பமாக  Daraz  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கு நன்கொடைகள் வழங்கவுள்ளது.

Daraz Cares உடன்  கைகோர்த்துள்ள  LEADS நிறுவனம் அவர்களின் வலையமைப்பின் ஊடாக பாடசாலைகளை  தெரிவு செய்ய உதவுவதுடன் அவர்களுக்கு மிகவும்  பொருத்தமான தேவைப்பாடுகளையும் குறித்து  காட்டும்.

னுயசயண ஊயசநள கல்விக்கு கைகொடுப்போம் ஊடாக Daraz நிறுவனம் இலங்கை மாணவர்களுக்கு நிலையான கல்வியினை பெற்றுக்கொள்வதற்கான சகல சாத்தியமான வாய்ப்புக்கள் பற்றியும் ஆராய்ந்து செயற்படும். எங்களின் சகல சமூகங்களுக்குமான கற்றல் என்ற தொனிப்பொருளின் கீழ் செயற்படும் Daraz Cares, ஆதரவு தேவைப்படுவோரை சென்றடைவதற்கும் அவர்களை வலுவூட்டவும் சமூகத்தினை வெவ்வேறு நிலைகளில் வளர்ச்சிப் பெற செயவதற்குமான முயற்சிகளில் தொடர்ந்தும்  ஈடுபடும்.

Hot Topics

Related Articles