உலகம்

இங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் இலங்கைக்கு திரும்ப அழைக்கப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி டி சில்வா தெரிவித்தார்.

குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோரே இவ்வாறு இலங்கைக்கு திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இரு வீரர்களும் இங்கிலாந்தின் டர்ஹாம் வீதிகளில் இரவில் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அணி மேலாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வீரர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையிலான டி 20 தொடரில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் இலங்கை 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தமை குறிப்படத்தக்கது.

Hot Topics

Related Articles