உலகம்

தனது உதவியாளரை முத்தமிடும் காட்சி கசிந்ததையடுத்து பதவி விலகினார் பிரித்தானியா சுகாதார செயலாளர்!

பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது உயர்மட்ட உதவியாளரை முத்தமிடும் சி.சி.டிவி காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் தாம் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது அலுவலகத்தில் உயர்மட்ட உதவியாளர் Gina Coladangelo உடன் நெருக்கமாக இருக்கும் சி.சி.டிவி காட்சிகளை The Sun வெளியிட்டுள்ளது.

42 வயதான மாட் ஹான்காக் கடந்த ஆண்டு கொரோனா பிடியில் பிரித்தானியா தவித்துக்கொண்டிருந்த போது Gina Coladangelo-வை தனது உயர்மட்ட உதவியாளராக பணியமர்த்தினார்.

ஜூன் மாதம் 6 ஆம் திகதி மாட் ஹான்காக் தனது உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் சி.சி.டிவி காட்சி பதிவாகியுள்ளது.

இந்த விடயம் சமூக ஊடகங்களில் கசிந்ததையடுத்து, தாம் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சமூக இடைவெளியைப் பேணத்தவறியதாகக் கூறி தமது சுகாதார செயலாளர் பதவியை இராஜனாமா செய்துள்ளார் மாட் ஹான்காக்.

மக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல தியாகங்களைச் செய்து வரும் நிலையில் தாம் அதற்கு மதிப்பளித்து பதவியை இராஜனாமா செய்வதாக கூறியுள்ளார்.

எனினும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் அவரின் இராஜனாமா கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

மாட் ஹான்காக் மக்கள் வரிப்பணத்தில் Gina Coladangelo-வை உதவியாளராக பணியமர்த்தி அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

15 ஆண்டுகளாக மனைவி Martha Hoyer Millar உடன் வாழ்ந்து வரும் மாட் ஹான்காக், அவரை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் கோடீஸ்வரி Gina Coladangelo (வயது 43), அவரது கணவர் Oliver Tress மற்றும் 3 மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles