உலகம்

 Uber நிறுவனம் ஓட்டுநர்கள் மற்றும் ஆவணங்கள், பொதிகள் விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் கொவிட் நிவாரணம் தொடர்பில் அறிவித்துள்ளது

Uber தனது தளத்தில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் ஆவணங்கள், பொதிகள் விநியோகஸ்தர்களுக்கு மற்றுமொரு கூடுதல் நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளதுடன், கொவிட் நோய் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டவர்கள் அங்கீகாரம் பெற்ற மருத்துவ பரிசோதனை மையத்திலிருந்து பி.சி.ஆர் (RT PCR) சோதனை முடிவை ஒப்படைத்த பின்னர் 14 தினங்களுக்கு பகுதியளவில் வருமான உதவியைக் கோருவதற்கு இடமளிக்கிறது.

பி.சி.ஆர் (RT PCR) சோதனையின் போது தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கார், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஆவணங்கள், பொதிகள் விநியோக கூட்டாளர்கள், அவர்கள் வசிக்கின்ற நகரம் மற்றும் இத்தளத்துடனான ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் 14 தினங்களுக்கு பகுதியளவில் வருமான உதவியாக அதிகபட்சமாக ரூபா 18,300 வரையான தொகையை ஒரே தடவை கொடுப்பனவாகப் பெற்றுக்கொள்வர்.

கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளவுடன் ஒட்டுநர்கள் மற்றும் ஆவணங்கள், பொதிகள் விநியோகஸ்தர்கள் பகுதியளவில் வருமான உதவியைப் பெற்றுக்கொள்கின்ற காலகட்டத்தில் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டு நடவடிக்கையாக இத்தளத்தை அணுக முடியாது.

துரதிர்ஷ்டவசமாக கொவிட் காரணமாக ஓட்டுநர் அல்லது ஆவணங்கள் பொதிகள் விநியோகஸ்தர் ஒருவர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதற்காக ரூபா 183,000 மதிப்புள்ள ஒரே தடவையிலான உதவித்திட்டத்தை Uber வழங்கும்.

இந்த உதவி முயற்சி குறித்து Uber India தெற்காசியாவின் வழங்கல் மற்றும் ஓட்டுநர்கள் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான பவன் வைஷ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, Uber ஓட்டுநர்கள் மற்றும் ஆவணங்கள், பொதிகள் விநியோகஸ்தர்கள் தங்களை அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பணியாளர்களாகக் காண்பித்து, இந்த நெருக்கடியிலிருந்து நாடு விடுபட உதவி வருகின்றனர். வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு அவர்கள் வீடுகளில் தங்கி குணமடையும் காலப்பகுதியில் பகுதியளவில் வருமான உதவியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொவிட்டின் பரவல் சங்கிலியை உடைக்க முயற்சிக்கின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ இது சரியான திசையில் மற்றொரு படியாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று குறிப்பிட்டார்.

 

செயலி (in-app) செய்திகள் மற்றும் விழிப்புணர்வூட்டல் காணொளிகள் மூலம் Uber இந்த முயற்சியை ஓட்டுநர்கள் மற்றும் ஆவணங்கள், பொதிகள் விநியோகஸ்தர்களுக்குத் தெரிவிக்கிறது.

தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலிருந்து, கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட அல்லது பொதுச் சுகாதார அதிகாரிகள் மூலமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்கு Uber நிதியுதவிகளைச் செய்து வருகிறது. மேலும், முகக்கவசங்கள், சானிடைசர்கள் மற்றும் தொற்றுநீக்கிகள் அடங்கலாக தனிப்பட்ட பாதுகாப்பு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீது ரூபா 17.4 மில்லியன் தொகையை Uber முதலீடு செய்துள்ளது

நிறுவனம் ஏற்கனவே 4,000 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வாகன ஓட்டுநருக்கும், சவாரி செல்கின்றவருக்கும் இடையில் வாகனத்தின் மேலுச்சியிலிருந்து கீழ் தளம் வரை இரு புறமும் வெளிப்படையாகத் தெரிகின்ற பாதுகாப்பு திரைகளை நிறுவியுள்ளது.

அண்மையில், சுகாதார அமைச்சுடன் கூட்டு சேர்ந்து, பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்து, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகளை வலுப்படுத்த கொவிட் விழிப்புணர்வு பிரச்சாரமொன்றையும் Uber ஆரம்பித்திருந்தது.

Uber தொடர்பான விபரங்கள்

பிரயாணத்தின் மூலம் வாய்ப்பைத் தோற்றுவிப்பதே Uber இன் நோக்கம். ஒரு பொத்தானைத் தொடுவதால் நீங்கள் எவ்வாறு பிரயாணத்தை மேற்கொள்ளலாம்? என்ற கேள்விக்;கு ஒரு எளிய தீர்வுடன் 2010 ஆம் ஆண்டில் நாங்கள் செயற்பட ஆரம்பித்தோம். 10 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களுக்குப் பிறகு, மக்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு இட்டுச்செல்ல உற்பத்திகளைக் கட்டியெழுப்பி வருகிறோம். நகரங்கள் வழியாக மக்கள் செல்வது, உணவு மற்றும் விடயங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை மாற்றுவதன் மூலம், புதிய வாய்ப்புக்களுக்கான உலகிற்கு வழிகோலும் ஒரு தளமே Uber ஆகும்.

Uber நிறுவனத்தின் தொடர்பு விபரங்கள்

ஸ்னேகா தேவ்

sneha.dev@uber.com

 

 

Hot Topics

Related Articles