உலகம்

 Hemas மற்றும் Plasticcycle இணைந்து பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு வலையமைப்பை விரிவுபடுத்துகின்றன

 

Hemas Consumer  நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக நிறுவன திட்டமான Plasticcycle இணைந்து 2020/21 நிதியாண்டில் இத்திட்டத்திற்கான, பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டி வலையமைப்பில், 25 புதிய சேகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சமீபத்திய விரிவாக்கம், இது ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் சமூக தொழில்முனைவோர் முயற்சியான Plasticcycle திட்டத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்பு முயற்சிகளுக்கு, இலங்கையின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer ஆதரவளிக்க உறுதியுடன் இருப்பதற்கான ஒரு பங்களிப்பாகும். இது பொறுப்பான கழிவகற்றலை ஊக்குவிக்கும் ஆழமான திட்டமாகும். பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களின் நுகர்விற்குப் பின்னரான பொறுப்பான முகாமைத்துவமாகும்.

நுகர்வோரால் மிக அதிகமாக விரும்பப்படும் இரண்டு தரக்குறியீடுகளான பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகியன Hemas Consumer சார்பில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன. சுற்றுச்சூழலுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் நெருக்கடியை சமாளிக்க ஒரு அசைக்க முடியாத ஆர்வத்துடன் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. சூழல் நட்பு தொடர்பான பல முயற்சிகளுக்கு முன்னணியில் நின்று செயற்பட்டு வரும் இந்த இரண்டு தரக்குறியீடுகளும் தொடர்ச்சியாக Plasticcycle இன் முயற்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்.

2020/21 ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில், கொழும்பு மாவட்டத்தின் முக்கிய பொது இடங்களில் மூன்று வெவ்வேறு கட்டங்களில் 25 தொட்டிகள் வைக்கப்பட்டன. பிரதானமான முக்கிய மருத்துவமனைகள், பொதுமக்கள் நடமாடும் பொதுவான இடங்களான விளையாட்டு வளாகங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் போன்றவற்றில் மொத்தமாக 900 கி.கி. இற்கும் அதிகமான நுகர்வின் பின்னரான பிளாஸ்டிக்கள் சேகரிக்கப்பட்டன.

Plasticcycle வலையமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட நுகர்வின் பின்னரான அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் இலங்கையில் பிளாஸ்டிக் மூலமான மாசடைவை குறைக்கும் நோக்கத்துடன் கழிவுப்பொருட்கள் சுழற்சி பொருளாதார அணுகுமுறையை நோக்கி நகர்த்துகிறது. சரியான நேரத்தில் முன்னெடுக்கப்படும் இம்முன்முயற்சியின் திறனை அவதானித்ததன் மூலம், பொது மக்களின் உற்சாக பங்களிப்புடன், உரிய பிரதேசத்தின் கூட்டாளர்கள், ஏனைய முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன், தொடர்ச்சியான சேகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முன்முயற்சி தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், “Hemas போன்ற ஒரு முன்னணி கூட்டமைப்பானது இவ்வாறான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான ஆதரவை வழங்குவது காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது. பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான ஆரோக்கியமற்ற நடைமுறைகளானது, உயிர்ப்பல்வகைமை மற்றும் விலங்குகளுக்கு குறிப்பிடும்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன, மேலும் இவ்விடயம் தொடர்பில் தக்க தருணத்தில் நாம் ஆராய்ந்துள்ளோம்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களும் ஒன்றிணைந்து, தாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உரிய வகையில் உரிய இடத்தில் இடுவதை தங்களது பொறுப்பாக நினைத்து, பிளாஸ்டிக் மாசுபடுதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கலாச்சாரத்தின் ஆரம்பப் புள்ளியாக, இந்த மீள் சேகரிப்பு பொறிமுறையானது அமையுமென, நாம் நம்புகிறோம். பிளாஸ்டிக்களின் வழித்தடத்தை குறைத்து சுற்றுச்சூழலை அதன் நலன் கெடாது பேணும் வகையிலான இவ்வாறான முன்முயற்சிகளைக் காண நாம் எதிர்பார்த்து நிற்கிறோம்.”

Plasticcycle என்பது (4R’s – Refuse, Reduce, Reuse, Recycle) மறுத்தல், குறைத்தல், மீள்பயன்பாடு, மீள் சுழற்சி ஆகியவற்றைக் கடைப்பிடித்து, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்பாக அகற்றுவதை ஆதரித்தல் மற்றும் மீள்சுழற்சி முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளுடனான ஒரு முன்முயற்சித் திட்டமாகும். Plasticcycle நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பொறிமுறையின் அடிப்படையில் இயங்குகிறது. இங்கு நுகர்வுக்கு பின்னரான பிளாஸ்டிக் கழிவுகள், உரிய சேகரிப்புக்கான இடங்களிலிருந்து, நியமிக்கப்பட்ட குறித்த சேகரிப்பாளர் மூலம் நாடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மீள்சுழற்சி செய்வதற்கான மீள்சுழற்சி மையங்களில் ஒப்படைக்கப்படுகிறது.

சூழல் தொடர்பான அதிக உணர்வைக் கொண்டுள்ள Hemas ஆனது, பிளாஸ்டிக் மாசுறலைக் கட்டுப்படுத்த, பிளாஸ்டிக் மீள்சுழற்சியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், Plasticcycle திட்டத்தை முன்னெடுத்துச் செலுத்துவதற்கு தொடர்ந்தும் அதன் ஆதரவை வழங்குகிறது. பொதுமக்கள் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவது தொடர்பான தங்களால் இயன்ற சிறு முயற்சியை முன்வந்து செய்யுமாறு Hemas அழைப்பு விடுக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எதிர்த்துப் போராடுவதில், தனிநபர்களின் சிறு முயற்சிகள் இணைந்து ஒரு பெரிய தாக்கத்திற்கு இட்டுச் செல்லும் என்பதோடு, இதன் மூலம் முழு நாடும் ஒரு பிளாஸ்டிக் அற்ற சூழலை நோக்கி பயணிக்க முடியும்.

 

Hot Topics

Related Articles