உலகம்

இலங்கையில் சேதன பசளை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நாட்டில் சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பசளைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சேதன பசளை உற்பத்திக்கு தேவையான இடம், தொழிநுட்ப இயந்திரம், உபகரணங்கள் போதுமான அளவு பிரதேச விவசாய திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றம்,தேசிய கால்நடை திணைக்களம், மில்கோ நிறுவனம், விவசாய திணைக்களம், மகாவலி அதிகாரசபை, கடற்தொழில் அமைச்சு, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, இராணுவத்தினர், இராணுவ சேவை அதிகார பிரிவு ஆகிய தரப்பினர் ஊடா சேதன பசளை உற்பத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

பெரும் போக விவசாயத்துக்கு தேவையான சேதன பசளையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சிறந்த திட்டமிடலுக்கமையவே இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே யாழ்.வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி பெறுமதியான சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் 9 மாகாணத்துக்கும் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles