உலகம்

அமானா வங்கியின் டிலான் ஜோசப் இலங்கை டோஸ்ட்மாஸ்டர் சம்பியனாக தெரிவு

 

அமானா வங்கியின் டோஸ்ட்மாஸ்டர் டிலான் ஜோசப், டோஸ்ட்மாஸ்டர்ஸ் மாவட்டம் 82 (Toastmasters District 82) சர்வதேச பேச்சுப் போட்டியில் இலங்கை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். மெய்நிகர் நிகழ்வாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலமாக, பிராந்தியம் 13 (Region 13) காலிறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் பங்கேற்கவுள்ளார்.

தமது பேச்சுத்திறமையினூடாக, கழகம், பிரதேசம் மற்றும் பிரிவு மட்ட போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள TM டிலான் ஜோசப், இலங்கையின் சிறந்த பேச்சுத்திறன் வாய்ந்தவர்களுடன் போட்டியிட்டிருந்தார். தேசிய மட்டத்தில் 8 பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 179 கூட்டாண்மை மற்றும் சமூக கழங்களைக் கொண்டு செயற்பட்ட இந்த போட்டியில் இவர் பங்கேற்று வெற்றிவாகை சூடியிருந்தார். ‘The Gap’ எனும் தலைப்பில் டிலான் ஆற்றிய உரையினூடாக முக்கியத்துவம் வாய்ந்த தகவல் வழங்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்த இந்த உரை, தாம் யார் என்பதற்கமைய தம்மை ஏற்றுக் கொள்வதை வலியுறுத்துவதாக இந்த உரை அமைந்திருந்தது.

உலக சம்பியனாக திகழும் கனவுடன் முன்நோக்கி பயணிக்கும் TM டிலான் ஜோசப், இலங்கையின் சகல டோஸ்ட்மாஸ்டர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இவர் பங்கேற்பதுடன், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வெற்றியாளர்களுடன் பிராந்தியம் 13 (Region 13) காலிறுதிப் போட்டியில் போட்டியிடுவார்.

திறன் வாய்ந்த பொதுப் பேச்சாளர்களை உருவாக்குவதில் புகழ்பெற்ற களமாக டோஸ்ட்மாஸ்டர்ஸ் மாவட்டம் 82 (Toastmasters District 82) திகழ்கின்றது. 7 ஆண்டுகள் எனும் குறுகிய காலப்பகுதியில் 3 உலக சம்பியன்களை உருவாக்கியுள்ளது. இதில் இலங்கையின் ஒரே உலக சம்பியனான TM தனஞ்ஜய ஹெட்டியாரச்சியும் அடங்குவார்.

TM டிலான் ஜோசப் அமானா வங்கியின் தனியார் வாங்கிப் பிரிவில் டிஜிட்டல் வாடிக்கையாளர் அனுபவ முகாமையாளராக பணியாற்றுவதுடன், அமானா வங்கியின் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் தற்போதைய தலைவராகவும் திகழ்கின்றார். இந்த வெற்றிக்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் Division F Humorous போட்டியிலும் TM டிலான் ஜோசப் வெற்றியீட்டியிருந்தார்.

அவரின் வெற்றி தொடர்பாக அமானா வங்கியின் மனித வளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி பர்ஹான் ரிஃபாய் கருத்துத் தெரிவிக்கையில், “டிலானின் வெற்றி தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம். ஒருவரின் கனவை எய்துவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த உதாரணமாக நான் இதைக் கருதுகின்றேன்.

2015 ஆம் ஆண்டில் அமானா வங்கியின் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்துடன் இணைந்து கொண்டது முதல், கழகத்தின் செயல்திறன் வாய்ந்த அங்கத்தவராக டிலான் திகழ்கின்றார். பல பேச்சுப் போட்டிகளில் வெற்றியீட்டி நீண்ட தூரம் பயணித்துள்ளார். வங்கியின் சார்பாக, டிலானுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம், எதிர்வரும் காலிறுதி போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் போட்டியிடுகின்றார். உலக சம்பியன் எனும் அவரின் இலக்கை வெற்றிகரமாக எய்த வேண்டும் என  வாழ்த்துகின்றோம்.” என்றார்.

TM டிலான் ஜோசப் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் போட்டியில் வெற்றியீட்ட முடிந்தமை உண்மையில் எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக கருதுகின்றேன். மாவட்ட மட்ட போட்டியில் சிறப்பாக செயலாற்றியிருந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். எனது இந்தப் பயணத்துக்கு அமானா வங்கி மற்றும் அமானா வங்கி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தினால் வழங்கப்பட்டிருந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் என்பது அழகிய நிகழ்ச்சித் திட்டமாக அமைந்திருப்பதுடன், தனிநபர்களை வினைத்திறன் வாய்ந்த தொடர்பாடல் திறன் வாய்ந்தவர்களாகவும் தலைவர்களாகவும் திகழ வலுவூட்டுவதாக அமைந்திருக்கும். டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியினால் அதிகளவு நான் பயன்பெற்றுள்ளேன் என்பதை தெரிவிப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது.

IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

Hot Topics

Related Articles