உலகம்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர், மரண தண்டனை கைதி துமிந்த சில்வா உள்ளிட்ட 93 பேருக்கு பொது மன்னிப்பு!

நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள், பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் இன்று கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.’

பாராளுமன்றில் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை, பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை செய்யப்படடுள்ளனர்.

அத்தோடு, மரண தண்டனைக் கைதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சில சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 76 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலைச் சம்பவத்தில், கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது.


ஜனாதிபதிக்கு, அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் 1 (அ) சரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக் கைதிகள் 93 பேர், இவ்வாறு பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

Hot Topics

Related Articles