உலகம்

இந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.

முதல் இன்னிங்சில் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா6வது நாளான இன்று தொடர்ந்து ஆடியது.

எனினும் 170 ரன்களுடன் சகல விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

ஆரம்ப ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 9 ரன்களிலும், தேவன் கான்வாய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், அதன்பின்னர் இணைந்த கேன்வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடி நிலைத்து நின்று ஆடினர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து சாம்பியன்ஷிப் கோப்பையை இலகுவாக கைப்பற்றியது.

இதன்மூலம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.

Hot Topics

Related Articles