உலகம்

இந்தியாவில் 40 பேருக்கு  டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு  – தமிழ்நாட்டில் ஒருவருக்கு தொற்றுறுதி!

இந்தியாவில் இரண்டாவது அலையின் போது அதிக உயிரிழப்புக்கு காரணமான டெல்டா வைரஸ்தான் தற்போது மரபணு மாற்றத்திற்கு உள்ளாகி டெல்டா பிளஸ் வைரஸாக பரவலடைந்து வருகின்றமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் நாட்டில் டெல்டா-பிளஸ் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா-பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருந்தது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு டெல்டா பிளஸ் பரவி வருகிறது.

இந்த பிரதேசங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு டெல்டா-பிளஸ் வைரஸ் பரவல் இந்தியாவில் 3ஆவது அலை ஏற்படுவதற்கான கவலையை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles