உலகம்

அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா?

ஆண், பெண் இருவருக்கும் உடல் அமைப்பில்தான் வித்தியாசம் மனம், மூளை போன்றன ஒன்றே மாதிரியானது என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் இருபாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண் மற்றும் ஆணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது.

பெண்களின் மூலையில் முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் ரசிக்கும் தன்மைக்கொண்டது.

மூன்றாவது மையம் முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

Scientists Explain 5 Differences Between The Male And The Female Brain »

ஆண் மூளையிலும் இந்த மூன்று மையங்களும் வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து கூறமுடியாது.

தான் உணரும் அந்த உணர்வுகளை ஒரு பெண்ணைப்போல் ஆணால் மொழியால் விவரிக்க முடியாது. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடியும் திறனும் குறைவு.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளைப் பார்த்தால் ஆண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவதற்கு ஆணின் மூளை அமைப்பே காரணம். ஆனால், பெண்ணின் மூளை அமைப்பு அப்படியல்ல.

இதுபோன்ற அடிப்படையான குணவேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப்பற்றி சரியான புரிதல் இருபாலருக்கும் இல்லாததால் காதலிக்கும் போதும் திருமணத்திற்கு பிறகும் பல தம்பதியினர் ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது ஆசைகளை பெண் நிறைவேற்றுவதில்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டே இருக்கிறது.

எனவே மணவாழ்க்கையிலும் காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க இருபாலரும் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம், என்கிறார்கள் உளவியலாளர்கள்.

Hot Topics

Related Articles