உலகம்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை புரட்டிப்போட்ட கிளாடெட் புயல் – 10 சிறுவர்கள் உட்பட 14 பேர் பலி!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை தாக்கிய கிளாடெட் புயல் காரணமாக காப்பகத்தை சேர்ந்த 8 சிறுவர்கள் உட்பட 14 பேர் பலி உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மணிக்கு பல மைல் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளி, அலபாமா மாகாணத்தில் பெரும் சேதங்களை விளைவித்துள்ளது.

புயலை தொடர்ந்து பெய்த கன தழை காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடு சாலைகளில் பெருக்கெடுத்தன.

இந்தன்போது சிறுவர் காப்பகத்தை சேர்ந்த சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அலபாமாவின் மாண்ட்கோமெரி நகரிலுள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று முன்னால் சென்ற மற்றொரு வாகனத்துடன் திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து வேனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தொடர் விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் காப்பகத்தின் வேனில் இருந்த 4 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மற்றொரு காரில் வந்த 29 வயது தந்தையும், அவரது 9 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

முன்னதாக புயலின்போது அலபாமா மாகாணம் டஸ்கலோசா நகரில் வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் மற்றும் 24 வயது ஆண் ஒருவரும்  உயிரிழந்தனர்.

அதேபோல் டெகால்ப் நகரில் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டதில் 23 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்துகளில் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Hot Topics

Related Articles