உலகம்

SLASSCOM தேசிய புதுப்புனைவுத் திறன் விருதுகள் 2020 இல் ‘Internal Processஇன் சிறந்த புத்தாக்கம்’ பிரிவில் வெற்றிபெற்ற Sysco LABS

SLASSCOM தேசிய புதுப்புனைவுத் திறன் விருதுகள் 2020 நிகழ்வில் ‘Internal Processஇன் சிறந்த புத்தாக்கம்’ பிரிவில் மாகாணங்களுக்கான வெற்றியாளர்களில் மேல் மாகாணத்துக்கான வெற்றியாளராக Sysco LABSஅண்மையில் அறிவிக்கப்பட்டது. Sysco Unified Testஅணியே இந்தப் பாராட்டை வென்றது.

Syscoஇன் நிறுவனங்களுக்கிடையில் பொதுவான பரிசோதனைத் தளமாக Sysco LABSஇல் உள்ளகத்தில் தயாரிக்கப்பட்ட தானியங்கி பரிசோதனைத் தளமே SUTAP ஆகும். இது பரிசோதனைகளை தரப்படுத்துவது மற்றும் ஒன்றிணைப்பதுடன், முகப்புப்பொட்டிகளை (dashboards)இலகுவில் புரிந்துகொண்டு பல்வேறு பங்குதாரர்களுக்கு பரிசோதனை முடிவுகளுக்கான அணுகலை மற்றும் முடிவு எடுப்பதை இலகுவாக்குகிறது.

திறந்த மூலநிரல் தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்தத் தளம் வருடாந்தம் 1 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சேமிக்கிறது.

கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி SLASSCOM நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருதுவழங்கும் நிகழ்வில் அணியின் சார்பில் தரமான பொறியிலை தலைமையேற்று நடத்தும் ரிஃபாட் மொஹமட் விருதைப் பெற்றுக்கொண்டார்.

பொறியியல் உற்பத்திகள், வியாபார செயற்பாட்டு முகாமைத்துவம் அல்லது செயல்முறை மேம்பாடு ஆகியவற்றின் சிறந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டாடுவதற்கும் ஆதரிப்பதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள துறைசார் வல்லுநர்கள் ஒன்றிணைந்து அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்தப் புதுப்புனைவுத் திறன் விருதுகள் நடத்தப்பட்டன.

Hot Topics

Related Articles