உலகம்

உணவு முறைமைகளை நிலைமாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரும் தேசிய உணவு முறைமைகள் பற்றிய கலந்துரையாடல்

உணவுப் பொருட்களின் உற்பத்தி, பதனிடல், விநியோகம், நுகர்வு, அப்புறப்படுத்தல் அடங்களாக இலங்கையில் நிலைபேறான உணவு முறைமைகளை உருவாக்குதல் சார்ந்த சவால்களைக் கண்டறியும் நோக்கத்துடன் விவசாய அமைச்சு ‘தேசிய உணவு முறைமைகள் தொடர்பான தேசிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

தேசிய உணவு முறைமைகள் தேசிய சம்பாஷணையில் பங்குபற்றுவோருக்காக அமைச்சர் மகிந்தானந்தா அளுத்கமகே செய் தியொன்றை விடுத்திருந்தார். இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறியபோதிலும், போஷாக்குக் குறைவு, போஷாக்கு மிகைத்தல், நுண்போஷாக்குக் குறைபாடுகள் என்ற ரீதியில் பரந்துபட்ட போஷாக்கின்மை சார்ந்த மூன்று பளுக்களை எதிர்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சகலருக்கும் பாதுகாப்பானதும், போஷாக்குடையதுமான உணவை கிடைக்கச் செய்வதில் விவசாயத் துறையே பிரதான பங்களிப்பு வழங்குகிறதெனக் குறிப்பிட்ட அமைச்சர், அதனை இலாபம் ஈட்டக்கூடியதாகவும், இயற்கைச் சூழலின் மீது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ரீதியாக உள்வாங்கக் கூடியதாகவும் மாற்றுவதற்கு உணவு முறைமைகளை நிலைமாற்றச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதன்மூலம், எதிர்கால சந்ததிக்காக உணவுப் பாதுகாப்பையும், போஷாக்கையும் பாதுகாக்க முடியுமென அவர் கூறினார். இவ்வாண்டு நியூயோர்க்கில் நடைபெறவுள்ள 2021 ஐநா உணவு உச்சிமாட்டிற்கு முன்னதாக விவசாய அமைச்சு முன்னெடுக்கும் தேசிய, மாகாண மட்ட கலந்துரைாடலின் ஒரு கட்டமாக இலங்கையின் பூர்வாங்க தேசிய உணவு முறைமை சகலந்துரையாடல் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம ;டி கருத்து வெளியிடுகையில், “ஐநா செயலாளர் நாயகம ; கூட்டிய உச்சிமாநாடானது, 2030ஆம் ஆண்டளவில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான ‘தசாப்த கால திட்ட’த்தின ; ஓரம்சமாகும். இது நிலைபேறான உணவு முறைமைகளுக்காக தத்தமது வழிமுறைகளைக் கண்டுபிடித்து, இத்தகைய பிரத்தியேக சவால்களை சமாளிக்கத் தேவையான நடவடக்கைகளை எடுக்க அங்கத்துவ நாடுகள் வாய்ப்பளிக்கிறது. இந்த உச்சிமாநாடானது கொள்கை வகுப்பாளர்களும் , உணவு முறைமை சார்ந்து நடவடிக்கை எடுப்பவர்களும் மாற்று செயற்பாடுகளின் தாக்கங்களை சிறப்பாக புரிந்து கொண்டு, கூட்டு நடவடிக்கைக்காக பங்காளித்துவத்தையும், எமது ஆற்றல்களையும் வலுப்படுத்த வாய்ப்பளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

தேசிய உணவு முறைமை சம்பாஷணை என்பது அரசாங ;கம், தனியாh ;த்துறை, சிவில் சமூக ஸ்தாபனங்கள், அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குதாரர்கள் பங்கேற்கும் உயர்மட்ட நிகர்நிலை கூட்டமாகும். இது இலங்கையின் விவசாய உணவு முறை மீது தாக்கம் செலுத்தும் பாரிய சவால்கள் ம Pது கவனம் குவிக்கிறது. சகலரும் பாதுகாப்பான மற்றும் போஷாக்குள்ள உணவைப் பெறும் வசதிகளை உறுதி செய்வதற்கும், நிலைபேறான நுகர்வுப் போக்குகள் நோக்கி நிலைமாறுவதற்கும் , சுற்றாடல் நேய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கும், உணவு முறைமைகள் முழுவதிலும் நியாயமான வாழ ;வாதாரத்தை வளர்ச்சியுறச்  செய்வதற்கும், பாதிக்கப்படக்கூடிய தன்மை – அதிர்ச்சிகள் – அழுத்தங்கள் ஆகியவற்றில் இருந்து மீண்டெழக்கூடிய ஆற்றலை கட்டியெழுப்புவதற்கும் தேவையான கூட்டு நடவடிக்கைகளை ஆராய்கிறது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற உணவு விவசாய ஸ்தாபனத்தின் (FAOA) பிரதிநிதி விமலேந்திர ஷரண், தேசிய மூலவளங்களைப் பாதுகாத்துக் கொண்டு, நிலைபேறான உணவு முறைமைகளுக்கு உதவக்கூடிய கொள்கை நடவடிக்கைகள் மற்றும் சட்ட வரம்புகளை ஸ்தாபிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். புதுமையான தீர்வுகள் வேண்டுமெனக் கூறிய அவர், “கடந்த காலத் தீர்வுகள் எதிர்காலத்திற்கான பதில்களாக அமைய முடியாது. இந்த உச;சிமாநாடு கடந்த காலத்தின் உதாரணங்களில் இருந்து முன்னேறிச் செல்ல சிறந்த வாய்ப்பளிக்கிறது” என்றும் தெரிவித்தார்.

உணவு முறைமையில் உள்ள மிகத் தீவிரமான ஏற்றத்தாழ்வுகளையும்  செயற்றிறன் குறைபாடுகளையும் பெருந்தொற ;று அம்பலப்படுத்தியுள்ளது. உணவு உற்பத்தி மற்றும ; பதனிடலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கானவர்களில் உணவு முறைமைகள் தங்கியிருக்கின்றன. இவர்களில் பலர் குறைந்த வருமானத்துடன் வாழ ;கிறார்கள். வெள்ளப்பெருக்கு, நீண்ட வரட்சி, சுவாத்திய மாற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களானலும், எல்லை கடந்து பரவிய பீடைகள ;, சேனைப்புழு தாக்கம் போன்றவற்றாலும்  உணவு முறைமைகள் அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த சமயத்தில் பெருந்தொற்றும் தாக்கியது.

இலங்கையில் உலக உணவுத் திட்டத்தின் (WDP) பணிப்பாளர் அப்துல் ரஹ Pம் சித்தீக் கருத்து வெளியிடுகையில், “இந்தப் பெருந்தொற்றானது, கணிசமான கற்றல் அனுபவங்களைத் தந்ததுடன், மீண்டெழக்கூடிய உணவு முறைமைகளைக் கட்டியெழுப்பும் நடைமுறையில் தயார்நிலையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது,” என்று தெரிவித்தார்.

“இத்தகைய தேசிய மட்ட கலந்துரையாடல்கள், எமக்கு தற்போதிருக்கும் முறைமைகளை மீள்பரிசீலனை செய்து, சகலருக்கும் சிறந்த உணவுப் பாதுகாப்பையும், போஷாக்கையும் அடைவதற்கு எமக்குரிய தெரிவுகளை மீள் மதிப்பீடு செய்து, தெளிவான பாதையை வகுப்பதற்குரிய கூட்டு முயற்சிக்கு சிறந்ததொரு களத்தைக் கொடுக்கின்றன”, என்று அவர் கூறினார்.

“உணவு முறைமைகள் உச ;சிமாநாடு என்பது எமது உணவு முறைமைகளில் அடிப்படை மாற்றங்களை மேற்கொண்டு, அவற்றை மென்மேலும் நீடித்து நிலைக்கக்கூடியவையாக, நிலைபேறானவையாக மாற்றக்கூடிய வாய்ப்பாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய ;து, சிறுதோட்ட உரிமையாளர்களான விவசாயிகளையும் , கிராமிய மக்களையும்  இந்தநடைமுறையின் மையப்புள்ளியாக மாற்றும் நோக்கில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஐகுயுனு பெருமை கொள்கிறது” என்றார், விவசாய அபிவிருத்தி சர்வதேச நிதியத்தின் (IFAO) இலங்கைக்கான பணிப்பாளர் ஷெரீனா தபாஸ்ஸூம்.

உணவு முறைமை சம்பாஷணைகளை விவசாய அமைச்சின் வழிநடத்தலில் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்ததுடன். இதற்கு UN, FAO, WFP, IFAD ஆகிய அமைப்புக்கள் உதவி செய்தன. நிலைபேறான உணவு முறைமைகள் நோக்கிய இலக்கை அடைவதற்கு புதுமையான பாதைகளை தனிநபர்களும், ஸ்தாபனங்களும்  பிரேரிக்கும் வகையில், சுயாதீன கலந்துரையாடல்களை நடத்துமாறும் ஊக்கமளிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற உணவு முறைமை சம்பாஷணைகளின் கூட்டான பெறுபேறுகள் பற்றி ஐநா உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் எடுத்துரைக்கப்படும்.

இந்த உச்சி மாநாட்டில் சகல நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் முயற்சியில் முன்னேற்றம் காணக்கூடிய தைரியமான புதிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும். இவற்றில் ஒவ்வொரு இலக்கும் ஆரோக்கியமான, மென்மேலும் நிலைபேறான, நியாயமான உணவு முறைமைகளில் கொஞ்சமேனும் தங்கியிருக்கின்றன.

Hot Topics

Related Articles