உலகம்

இலங்கையில் டெல்டா கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான 5 பேர் சமூகத்தில் அடையாளம்!

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையில் அதிகமான உயிரிழப்புகளுக்கு காரணமான மிகவேகமாக பரவும் வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொவிட் வைரஸ் வகை தொற்று உறுதியான 5 பேர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்டா கொவிட் வைரஸ் வகையால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தற்போது இலங்கையில் பரவிவரும் B.117 கொவிட் வைரஸ் வகையை விடவும் 50 மடங்கு பரவல் வேகம் கொண்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் கொழும்பு – 9, ஆராமய பகுதியில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

டெல்டா கொவிட் வைரஸ் வகையானது ஒருவரிடமிருந்து 5 முதல் எட்டுப்பேருக்கு பரவும் தன்மை கொண்டது.

இதற்கு முன்னதாக டெல்டா கொவிட் வைரஸ் வகையால் பாதிக்கப்பட்ட இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இதேநேரம், பிரித்தானியாவின் அல்பா கொரோனா வைரஸ் வகை தொற்றுறுதியான 8 பேர், காலி, மட்டக்களப்பு, கொழும்பு – 6, கொழும்பு – 8 மற்றும் கொழும்பு – 10 ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.

அல்பா கொரோனா வைரஸ் வகை டெல்டா கொவிட் வைரஸ் வகையை விடவும் வீரியம் குறைந்தது.

கொரோனா வைரஸ்

 

நாட்டில்  கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர்  16 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 233,053ஆகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 195,434 ஆகவும் அதிகரித்துள்ளது.

Hot Topics

Related Articles