உலகம்

Thales உடன் இணைந்து உலகின் முதலாவது 5G SA ஒத்திசையும் eSIM இனை வெளியிடும் OPPO

OPPO இன் சமீபத்திய முதன்மையான 5G ஸ்மார்ட்போன் OPPO Find X3 Pro இல் 5G SA இற்கு ஒத்திசையும் eSIM அம்சம்

உலகின் முதலாவது 5G SA இணக்கமான eSIM ஆனது, தமது முதன்மையான 5G ஸ்மார்ட்போன் ஆன, OPPO Find X3 Pro இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, OPPO இன்று அறிவித்துள்ளது. இது உலகின் முன்னணி eSIM இணைப்பு முகாமைத்துவ நிறுவனமான Thales உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5G Standalone (SA) eSIM அடிப்படையிலான OPPO Find X3 Pro, பயனர்களுக்கு 5G SA வலையமைப்புகளால் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட 5G அனுபவத்தையும், பயனர்கள் மற்றும் தொலைபேசி வயைலமைப்பு ஆகிய இரு தரப்பினருக்கும் eSIM தொழில்நுட்பத்தின் நன்மைகளையும் வழங்கும்.

சாதனங்களில் வழமையாக இணைக்கப்படும் சிம் அட்டைகளைப் போலன்றி, eSIM அல்லது உட்பொதிக்கப்பட்ட சிம் ஆனது, நேரடியாக சாதனத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வலையமைபிடமிருந்து, தொடர்பாடல் வசதியை தேர்ந்தெடுக்கும்போது நம்பகமான மற்றும் மிருதுவான டிஜிட்டல் அனுபவத்தை தங்களது ஸ்மார்ட்போனிலிருந்து அனுபவிக்க முடியும்.

எனவே, கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள் தங்களது டிஜிட்டல் உருமாற்ற சவாலை எதிர்கொள்ளும் வகையில், Thales eSIM அதற்கான உதவியை மேற்கொள்கிறது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் போன்ற அணியக்கூடிய பொருட்களுக்கு மேலதிகமாக, தொடர்பாடல் வசதி இணைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் தொழில்துறை இணைய விடயங்களிலும் (IIOT) eSIMகளானவை பரவலாக வளர்ச்ச்சியடைந்து வருகின்றன.

5G ஆனது, பிரதான எதிர்கால பாதுகாப்பு உட்கட்டமைப்பு எனும் வகையில், 5G SA (Standalone) வலையமைப்புகள், குறைந்த தாமதம், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் விரிவான 5G அனுபவத்துடன், உலகெங்கிலும் உள்ள முக்கிய தொலைபேசி வலையமைப்புகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. OPPO மற்றும் Thales ஆகியன இணைந்து, 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வழிநடத்தும் வகையில், உலகில் முதன்முதலாக eSIM மூலம் இயங்கும் சாதனத்தில் 5G SA வலையமைப்பிற்கு ஒத்திசைகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த OPPO வின் Carrier Product, சிரேஷ்ட பணிப்பாளர், Xia Yang, “உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான OPPO, ஆரம்பத்தில் இருந்தே 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பின்தொடர்ந்து வருகிறது. பயனர்களுக்கு புதுமையான 5G அனுபவங்களை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த அனுபவங்களை வழங்குவதில் eSIM ஒரு அற்புதமான வாய்ப்பாக நாம் காண்கிறோம்,” என்றார்.

“Thales உடனான எமது தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம், 5G SA இற்கு ஒத்திசையும் eSIM பொருத்தப்பட்ட உலகின் முதலாவது சாதனமாக Find X3 Pro இனை நாம் உருவாக்கியுள்ளோம். 5G SA வலையமைப்பானது, உலகளாவிய ரீதியில் நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து, Find X3 Pro ஆனது 5G SA இற்கு ஒத்திசையும் eSIM இனை கொண்டிருப்பதன் காரணமாக, அதனைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அது அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.”

அனைத்து கண்டங்களிலும் உள்ள கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள், வலையமைப்பு கூட்டணிகள், MVNOக்கள் மற்றும் OEM களுக்கு, 200 இற்கும் மேற்பட்ட eSIM முகாமைத்துவ தளங்கள், வன்பொருள் அடிப்படையிலான eSIM மற்றும் eSIM இணைப்பு முகாமைத்துவம் ஆகிய இரண்டையும் வழங்குவதில், Thales உலகின் முன்னணி வழங்குநராக உள்ளது. OPPO இன் முக்கிய eSIM தீர்வுகளுக்கான கூட்டாளர் என்ற வகையில், Thales இனது eSIM தீர்வுகள், ஏற்கனவே OPPO வின் முதலாவது உள்ளமைக்கப்பட்ட வலையமைப்பு இணைப்பு ஸ்மார்ட் கைக்கடிகாரமான OPPO Watch இல் இணைக்கப்பட்டுள்ளது.

eSIM server validation, device debugging, verification, function development போன்றவற்றின் மூலம் Thales இன் புதுமையான eSIM தீர்வை Find X3 Proவுடன் ஒருங்கிணைப்பது தொடர்பான பணியில், OPPO மற்றும் Thales மிக ஒன்றிணைந்து பணியாற்றின. பயனர்கள் தங்கள் Find X3 Pro மூலம் அதில் செயற்பாட்டில் உள்ள இரு இணைப்புகளை (நீக்கக்கூடிய சிம் மற்றும் ஒரு eSIM) ஒரே நேரத்தில் உரிய வகையில் இயங்குகின்றதா என்பதை சரிபார்ப்பது தொடர்பிலும் OPPO மற்றும் Thales மிக ஒன்றிணைந்து பணியாற்றின. அத்துடன் இவ்வொத்துழைப்பின் மூலம் முதன் முறையாக 5G SA ஆனது eSIM இற்கு ஒத்திசையும் சாதனத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளது.

Thales இன் வட ஆசியாவின் பிரதித் தலைவரும் சீனாவுக்கான பிரதான நிறைவேற்று அதிகாரியுமான,  Jérôme Bendell இது தொடர்பில் தெரிவிக்கையில், “5G SA இற்கு ஒத்திசையும் முதலாவது eSIM இனை, OPPO Find X3 Pro இல் சரிபார்த்து வணிகமயமாக்கியமை தொடர்பிலும், OPPO உடனான எமது தொடர்ச்சியான கூட்டாண்மை தொடர்பிலும் நாம் பெருமைப்படுகிறோம்” என்றார். “eSIM தொழில்நுட்ப வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

eSIM தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டின் மூலம், இது வலையமைப்புகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் 5Gயின் நன்மைகளை மேலும் அதிகளவில் வழங்குமென நாம் நம்புகிறோம். குறிப்பாக, இலத்திரனியல் சுற்றுப்பலகையில் நேரடியாக இணைக்கப்பட்ட 5G SA eSIM ஆனது, நம்பிக்கை மற்றும் மீண்டு வருதல் ஆகிய அம்சங்களை அதிகரிக்க உதவுவதன் காரணமாக, அவர்களது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், தொலைபேசி வலையமைப்பு வழங்குனர்கள் 5G வலையமைப்புகளை பயன்படுத்துகின்றனர்.” என்றார்.

பயனர் தேவைகள் மற்றும் அனுபவங்களால் உந்தப்பட்ட OPPO, 2018 இல் eSIM தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஆரம்பித்தது. அதன் பின்னர் தொடர்ச்சியான eSIM இற்கு இசைவாக்கத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

OPPO Find X3 Pro ஆனது, 5G SA ஒத்திசையும் eSIM இனை கொண்டிருப்பதானது, OPPO இன் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் eSIM தொழில்நுட்பத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை நிரூபிப்பது மட்டுமல்லாமல், 5G SA வலையமைப்புகளின் வெளியீட்டை விரைவுபடுத்துவதில் OPPO இன் முதலீடுகளையும் பிரதிபலிப்பதுடன், 5G யின் ஆரம்ப கட்டத்திலேயே, பயனர்கள் அதன் அனுபவங்களை பெறவும் அனுமதிக்கிறது.

Hot Topics

Related Articles